Monday, 21 May 2018

அல் குர்ஆனோடு நம்முடைய தொடர்பும் அதன் பயன்களும்

【பாவம் என்ற நோயிக்கு அல்குர்ஆனே அரும்மருந்து!】

عن سلام بن مسكين قال: سمعتُ قتادة، يقول:
"إنَّ هذا القُرآن يدلُّكم على دائكم ودوائكم، فأمَّا داؤكم: فالذُّنوب، وأمَّا دواؤكم: فالاستغفار ؟
رواه البيهقي)


ஸலாம் இப்னு மிஸ்கீன் என்பவரிமிருந்து அறிவிக்கப்படுகிறது.
கதாதா (ரலியல்லாஹு அன்ஹு) கூற, தான் கேட்டதாக கூறுகிறார் :
நிச்சயமாக இந்தக் குர்ஆன் உங்களிடமுள்ள நோயையும், (அதற்குரிய) உங்களுக்கான மருந்தையும் உங்களுக்கு அறிவித்துக் கொடுக்கிறது.
அறிந்துக்கொள்ளவும்.
உங்களின் நோய் பாவங்களாகும், (அதற்குரிய) உங்களின் மருந்து பாவ மன்னிப்பாகும்.
நூல்: பைஹகீ


【உள்ளதின் நோயிற்கான சிகிச்சை】

قال عبد الله الانطاكى رحمة الله عنه دواء القلب خمسة اشياء: 
مجالس الصالحين 
وقرأة القرآن 
واخلاء البطن من الحرام 
وقيام الليل 
والتضرع عند الصبح 
( الكتاب: تنبيه الغافلين للإمام ابي الليث نصر بن محمد السمرقند باب الدعاء صفحة: ٢٧٤)


அப்துல்லாஹ் அல்அன்தாக்கீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உளத்தி(ல் நோயி)ற்கான மருந்து ஐந்து விஷயங்களாகும்.
1. நல்லவர்களோடு அமர்தல்.
2. குர்ஆனை ஓதுதல்.
3.ஹராமிலிருந்தும் (உண்பதிலிருந்து) வயிற்றை தூய்மையாக வைத்தல்.
4. இரவு வணக்கம்.
5. அதிகாலையில் அச்சத்துடன் பிரார்த்தித்தல்.


【மறுமையின் சொத்து அல்குர்ஆனாகும்!】

أنه مر ذات يوم بسوق المدينة فهالهاشتغال الناس بالدنيا واستغراقهم في البيع والشراء والاخد والعطاء فوقف عليهم وقال : ما أعجزكم يااهل المدينة قالوا: وما رأيت من عجزنا يا أبا هريرة قال: ميراث رسول الله يقسم وأنتم هاهنا لا تذهبون فتأخذون نصيبكم منه؟ قالوا وأين هويا اباهريرة ؟ قال: في المسجد فخرجوا سراعا إلى المسجد ووقف أبو هريرة لهم حتى رجعوا فلما رأوه قالوا: يا أبا هريرة فقد أتينا المسجد فدخلنا فلم نر فيه شيئا يقسم فقال لهم أبو هريرة: أما رأيتم في المسجد أحدا قالوا: بلى رأينا قوما يصلون وقوما يقرأون القرآن وقوما يتذاكرون الحلال والحرام فقال لهم أبو هريرة ويحكم فذاك ميراث محمد صلى الله عليه وسلم.
(الكتاب: صور من حياة الصحابة)


ஒரு நாள் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கடைவீதிக்கு சென்றார்கள். துன்யாவோடு மக்களின்(அளவு கடந்த) ஈடுபாடும் ,கொடுக்கல், வாங்கலிலே மக்கள் மூழ்கியிருப்பதும் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.உடனே மக்களிடம் சென்று "மதீனாவாசிகளே எது உங்களை (இப்படி) பலவீனமாக்கியது?
மக்கள் :அபூ ஹுரைரா(ரலி)அவர்களிடம் எங்களிடம் பலவீனமாக எதை கண்டீர்கள்?என்றனர்
அபூ ஹுரைரா(ரலி) அல்லாஹ்வின் தூதர்(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் சொத்து பங்கிடப்படுகிறது. நீங்களோ போகாமல் இங்கே இருக்கின்றீர்கள்.நீங்கள் சென்று உங்களுக்கான பங்கை பெற்றுக்கொள்ள வேண்டாமா?என்றார்கள்
மக்கள் : எங்கே அபூ ஹுரைரா (ரலி) ?என்றனர்.
அபூ ஹுரைரா (ரலி) பள்ளியிலே தான்
என்றார்கள்.
மக்கள் விரைந்து சென்றனர்.மக்கள் (சென்று)திரும்பி வரும்வரை அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்.
(திரும்ப வந்த) மக்கள் அபூ ஹுரைரா (ரலி) அவர்களை பார்த்து பள்ளிக்குவந்து உள்ளே சென்றோம் எதை பங்கிடப்படுவதாக நாங்கள் காணவில்லையே என்றனர்.
அபூ ஹுரைரா(ரலி) : நீங்கள் பள்ளியில் யாரையும் பார்க்கவில்லையா? என்றார்கள்.
மக்கள் : ஆம் சிலரை தொழுபவர்களாகவும்,சிலரை குர்ஆனை ஓதிக்கொண்டிருப்பவர்களாகவும், சிலரை ஹராம் ,ஹலால் குறித்து உரையாடுபவர்களாகவும்கண்டோம் என்றனர்.
அபூ ஹுரைரா (ரலி) : அந்த மக்களை கண்டித்துவிட்டு " அது தான் (பள்ளியில் நீங்கள் கண்டதுதான்)முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் சொத்தாகும்” என்று கூறினார்கள்.


【ரமாலானில் அல்குர்ஆனோடு இமாம்களின் தொடர்பு】

كان مالك بن أنس إذا دخل رمضان يفر من الحديث ومجالسه أهل العلم ويقبل على تلاوة القرآن  من المصحف
★ كان سفيان الثوري إذا دخل رمضان ترك جميع العباد وأقبل على قراءة القرآن.
★يَحْيَى بن نصر ، قال : كَانَ أَبُو حنيفة ربما ختم القرآن في شهر رمضان ستين ختمة


மாலிக் இப்னு அனஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ரமலான் மாதம் வந்துவிட்டால் ஹதீஸ் பாடத்திலிருந்தும், அறிஞர்களோடு அமர்வதிலிருந்தும் (விடை பெற்று) விரைந்து, குர்ஆனை ஓதுவதில் (முழு) கவனத்தை செலுத்துவார்கள்.

சுஃப்யானுஸ் ஸவ்ரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ரமலான் மாதம் வந்துவிட்டால் எல்லா (உபரியான) வணக்கங்களையும் விட்டுவிட்டு குர்ஆனை ஓதுவதில் கவனம் செலுத்துவார்கள்.

யஹ்யப்னு நஸ்ரு கூறுகிறார்கள்: இமாம் அபூஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ரமலானில் அறுபது முறை குர்ஆனை முடிப்பார்கள்.


【உலகின் அழிவை தள்ளிபோடும் சக்தி குர்ஆனுக்கு உண்டு】

حَدَّثَنَا مَالِكُ بْنُ دِينَارٍ ، قَالَ : بَلَغَنَا أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ ، يَقُولُ : " إِنِّي أَهُمُّ بِعَذَابِ خَلْقِي ، فَأَنْظُرُ إِلَى جُلَسَاءِ الْقُرْآنِ ، وَعُمَّارِ الْمَسَاجِدِ وَوِلْدَانِ الإِسْلامِ ، فَيَسْكُنُ غَضَبِي " (الكتاب: مؤطا للامام مالك رح)


மாலிக் பின் தீனார் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : (பின்வரும்) நபி மொழி எங்களுக்கு கிடைத்தது.
நிச்சயமாக மகத்துவமும் கண்ணியமும்மிக்க அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக நான் என் படைப்புகளை தண்டிக்க உறுதிக்கொள்கிறேன்.
நான் குர்ஆனை ஓதக்கூடியவர்களையும் , இறை இல்லங்களை (தொழுகையால்) கட்டமைக்ககூடியவர்களையும், இஸ்லாமிய சிறார்களையும் பார்க்கிறேன் என் கோபம் அடங்கிவிடுகிறது.


【சிறிய சூராவுடன் அதிகம் தொடர்பு வைத்திருந்த சஹாபிக்கு கிடைத்த மகத்துவம்】

أنس بن مالك قال: كنا مع رسول الله صلى الله عليه وسلم بتبوك فطلعت الشمس بضياء، ولها شعاع ونور، لم أرها طلعت فيما مضى، فأتى جبريل رسول الله.
فقال: «يا جبريل مالي أرى الشمس اليوم طلعت بيضاء ونور وشعاع، لم أرها طلعت فيما مضى».
قال: ذلك أن معاوية ابن أبي معاوية الليثي مات بالمدينة اليوم، فبعث الله إليه سبعين ألف ملك يصلون عليه.
قال: «ومم ذاك؟»
قال: بكثرة قراءته { قل هو الله أحد } بالليل والنهار، وفي ممشاه وفي قيامه وقعوده، فهل لك يا رسول الله أن أقبض لك الأرض فتصلي عليه؟
قال: «نعم!».
قال: فصلى عليه، ثم رجع.
وفي رواية فصلى وخلفه صفان من الملائكة في كل صف سبعون ألف ملك.
(الكتاب: رواه البيهقي) 


அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்:
நாங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் தபூக் என்னுமிடத்தில் இருந்தோம். அது சமயம் சூரியன் (மிக) வெண்மையாக உதயமானது. அதற்கு (நல்ல) ஒளியும், பிரகாசமும் இருந்தது. கடந்த காலங்களில் அது போன்று சூரியன் உதயமாகி நான் பார்த்ததில்லை.
அப்போது ஜிப்ரீல் ( அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம்) அவர்களிடம் வந்தார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "ஜிப்ரீலே இன்றைய நாளில் சூரியனை நான் (நல்ல) வெண்மையும், ஒளியும், பிரகாசமும் கொண்டதாக உதயமாகுவதை காண்கின்றேன்.கடந்த காலங்களில் இவ்வாறு உதயாமானதாக நான் கண்டதில்லையே என்ன காரணம்?" என்று வினவினார்கள்.
அதற்கு ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் "அது மதீனால் இன்று முஆவியா பின் அபீ முஆவியா அல்லைசி என்ற தோழர் மரணித்து விட்டார். அவருக்கு (ஜனாஸா) தொழுகை நடத்துவதற்காக எழுபதாயிரம் மலக்குமார்களை அல்லாஹ் அனுப்பியுள்ளான்" என்று கூறினார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எதன் காரணமாக (மலக்குகள் அனுப்பட்டனர்) ?என்று வினவினார்கள்.
ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் " அவர் இரவிலேயும் ,பகலிலேயும், நடக்கும்போதும் நிற்கும்போதும், அமரும்போதும் அதிமாகமாது குல் ஹுவல்லாஹு அஹது என்ற சூராவை ஓதிக்கொண்டேயிருந்ததின் காரணமாகத் தான்" என்று கூறினார்கள்.
ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே நீங்கள் அவருக்கு (ஜனாசா தொழுகை) தொழுகு வதற்காக உங்களுக்கு நான் பூமியை சுருக்கட்டுமா?" என்று வினவினார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆம் என்றார்கள்.
அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்:
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்த தோழருக்கு (ஜனாஸா தொழுகை) தொழுதுவிட்டு திரும்ப வந்தார்கள்.
மற்றொரு அறிவிப்பில் : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தொழுதார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பின் மலக்குமார்களின் இரண்டு வரிசைகள் இருந்தன. ஒவ்வொரு வரிசையிலும் எழுபதாயிரம் மலக்குகள் இருந்தார்கள்" என்றும் வருகிறது.


【அல்குர்ஆன் வறுமையை ஒழிக்கும் அற்புத ஆற்றல் பெற்றது】

عاش عبد الله بن مسعود الى زمن خلافة عثمان رضى الله عنه فلما مرض مرض الموت جاءه عثمان عائدا فقال له : 
ما تشتكى ؟.
قال : ذنوبى . 
قال : ما تشتهى ؟. 
قال : رحمة ربى .
قال : ألا أمر لك بعطائك الذى امتنعت عن أخذه منذ سنين ؟!. 
قال : لا حاجه لى به .
قال : يكون لبناتك من بعدك .
قال: أتخشى على بناتى الفقر ؟. 
انى أمرتهن أن يقرأن كل ليلة سورة الواقعة ....
وانى سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : 
(من قرأ الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا ). 
(الكتاب: صور من حياة الصحابة صفحة: 108)


இப்னு மஸ்ஊது(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் உஸ்மான்(ரலியல்லாஹு அன்ஹு)ஆட்சிக் காலம் வரை வாழ்ந்தார்கள்.அவர்கள் மரணத் தருவாயில் கலீஃபா உஸ்மான்(ரலி) நோய் விசாரிக்க வந்தார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் :நீங்கள் எதை முறையீடு செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
இப்னு மஸ்ஊது(ரலி)அவர்கள்: என்னுடைய பாவத்தை என்றார்கள்.
உஸ்மான்(ரலி) அவர்கள்: எதை ஆசை வைக்கிறீர்கள்? என்று கேட்டார்கள்
இப்னு மஸ்ஊது(ரலி) அவர்கள்: என்னுடைய ரப்பின் அருளை என்றார்கள்.
உஸ்மான்(ரலி)அவர்கள்: பல ஆண்டுகளாக நீங்கள் ஏற்க மறுத்துவரும் உங்களுக்கான(உதவி). தொகையை கொடுக்க உத்திரவிடட்டுமா?என்று கேட்டார்கள்.
இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள்: எனக்கு அது தேவையில்லை என்றார்கள்.
உஸ்மான்(ரலி) அவர்கள்: உங்களுக்கு பின்பு உங்களின் பெண்பிள்ளைகளுக்கு (பிரயோஜனமாக) ஆகுமே என்று கேட்டார்கள்.
இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் : என்னுடைய பெண்பிள்ளைகள் விஷயத்தில் வறுமையை அஞ்சுகிறீரா? நான் ஒவ்வொாரு இரவும் சூரத்துல் வாகிஆ ஒத வேண்டுமென்று அவர்களுக்கு கட்டளையிட்டுள்ளேன். நிச்சயமாக நான் நபி( ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூற கேட்டேன்
" யார் ஒவ்வொரு இரவும் சூரத்துல் வாகிஆ ஓதுவாரோ அவரை ஓருபோதும் வறுமை தீண்டாது" என்று.


🏘🏘🏘🏘🏘🏘【அருமை சஹாபாக்களுக்கு குர்ஆன் ஏற்படுத்திய தாக்கம்】

سمع عمر بن الخطاب رضي الله عنه رجلا يتهجد في الليل ويقرأ سورة الطور فلما بلغ إلى قوله تعالى { إن عذاب ربك لواقع ، ما له من دافع } قال عمر : قسم ورب الكعبة حق، ثم رجع إلى منزله فمرض شهرا يعوده الناس لا يدرون ما مرضه 
(الكتاب: تخويف من النار الابن الرجب الحنبلي)


ஒரு மனிதர் தஹஜ்ஜுது தொழுகையில் தூர் என்ற சூராவை ஓதுவதை உமர் (ரலியல்லாஹு அன்ஹு) கேட்டார்கள்.
அந்த மனிதர் (பின் வரும்) வசனத்தை ஓதியபோது
اِنَّ عَذَابَ رَبِّكَ لوَاقِعٌ ۙ‏ 
நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.
مَّا لَهٗ مِنْ دَافِعٍۙ‏
 அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
(சூரா: தூர்
வசனம்,7,8)
உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் “கஃபாவின் இறைவன் மீது சத்தியமாக (இறைவனின்) இந்த ஆணை உண்மையானது” என்று கூறிவிட்டு தன் வீட்டிற்கு சென்றார்கள்.
பிறகு ஒருமாத காலம் நோயுற்றார்கள். மக்கள் என்ன நோய் என்று புரியாமலேயே நோய் விசாரித்து சென்றனர்.

قال عبدالله بن عروة ببن الزبير : قلت لجدتي أسماء بنت أبي بكر كيف كان أصحاب رسول الله صلى الله عليه وسلم إذا سمعوا القرآن ؟ قالت : ( تدمع أعينهم وتقشعر جلودهم كما نعتهم الله ) 

அப்துல்லாஹ் இப்னு உர்வா இப்னு ஜுபைர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தன்னுடைய பாட்டி அஸ்மா பின்த்து அபூ பக்ரு (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரின் தோழர்கள் இறைமறையை ஓதுவதைக் கேட்டால் எந்த நிலையில் இருப்பார்கள்?” என்று வினவினார்கள்.
அதற்கு அன்னார் “அல்லாஹ் கூறுவது போன்று அவர்களின் கண்கள் கண்ணீரை கொட்டும், அவர்களின் தோல் (களின் ரோமக்கால்) கள் சிலிர்த்து விடும்” என்று கூறினார்கள்.

زَيْد بْن أَسْلَم عَنْ أَبِيهِ عَنْ عَامِر اِبْن رَبِيعَة أَنَّهُ نَزَلَ بِهِ رَجُل مِنْ الْعَرَب فَأَكْرَمَ عَامِرٌ مَثْوَاهُ وَكَلَّمَ فِيهِ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَهُ الرَّجُل فَقَالَ إِنِّي اِسْتَقْطَعْت مِنْ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَادِيًا فِي الْعَرَب وَقَدْ أَرَدْت أَنْ أَقْطَع لَك مِنْهُ قِطْعَة تَكُون لَك وَلِعَقِبِك مِنْ بَعْدك فَقَالَ عَامِر لَا حَاجَة لِي فِي قَطِيعَتك نَزَلَتْ الْيَوْم سُورَة أَذْهَلَتْنَا عَنْ الدُّنْيَا " اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابهمْ وَهُمْ فِي غَفْلَة مُعْرِضُونَ " 
الكتاب: تفسير ابن كثير) 


ஸைத் பின் அஸலம் (ரஹிமஹுல்லாஹ்) கூறியதாவது. ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்களிடம் அரபியர் ஒருவர் விருந்தாளியாக வந்து தங்கினார். அவருக்கு ஆமிர் ( ரலி) அவர்கள் நல்ல முரையில் விருந்தோம்பல் செய்தார்கள். அவர் குறித்து அல்லாஹ்வின் துதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் தெரிவித்தார்கள்.
(அந்த மனிதர் (நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களை சந்தித்தார்)
அதைத் தொடர்ந்து அம்மனிதர் ஆமிர் (ரலி) அவர்களிடம் வந்து, "நான் அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்களிடமிருந்து அரபு நாட்டில் உள்ள ஒர் ஒடைப் பகுதியை வருவாய் மானியமாகப் பெற்றிருக்கிறேன்.அதன் ஒரு பகுதியை நீரும் உமக்குப் பின் வரும் உம்முடைய சந்ததியினரும் பயன் பெறும் வகையில் உமக்குப் பிரித்துக் கொடுக்க நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.
அவரிடம் ஆமிர் (ரலி) அவர்கள், “ நீர் தர விரும்பும் பங்கு எனக்குத் தேவையில்லை. ஏனெனில், உலக மோகத்திலிருந்து எங்களது கவனத்தை திருப்பக்கூடிய ஒர் அத்தியாயம் இன்று அருளப்பெற்றது என்று கூறிவிட்டு " மனிதர்களுக்கு அவர்களின் விசாரணை (நேரம்)நெருங்கிவிட்டது. ஆனால் அவர்கள் கவனமில்லாமல் அலட்சியப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்" என்ற இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.


【நல்லோர்களுக்கு இறைமறை வசனங்கள் ஏற்படுத்திய தாக்கம்】


ان ابا حنيفة (رحمه الله) قام الليل كله وهو يردد قوله جل وعز (بل الساعة موعدهم، والساعة ادهى وأمر)وهو يبكي من خشية الله بكاء يقطع نياط القلوب.
(صور من حياة التابعين)


இமாம் அபூஹனீஃபா
(ரஹிமஹுல்லாஹ்)
அவர்கள் இரவு முழுவதும் இந்த வசனத்தை(இறுதித்தீர்ப்பு நாள் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும்; இறுதித் தீர்ப்பு நாள் மிகக் கடுமையானதாகும், மிகக் கசப்பானதாகும்.
(சூரா அல் கமர் -54:46 )
திரும்ப திரும்ப ஒதி நின்று வணங்கினார்கள்.
இன்னும் அல்லாஹ்வின் அச்சத்தால் இதயத்தின் இரத்த நாளங்கள் துண்டிக்கப்படும் அளவுக்கு அழுதார்கள்.

روى ابن أبي الدنيا من حديث عبدالرحمن بن الحارث بن هشام ، قال : سمعت عبدالله بن حنظلة يوما وهو على فراشه وعدته من علته ، فتلا رجل عنده هذه الآية { لهم من جهنم مهاد ومن فوقهم غواش } فبكى حتى ظننت أن نفسه ستخرج ، وقال : صاروا بين أطباق النار ثم قام على رجليه ، فقال قائل : يا أبا عبدالرحمن اقعد ، قال منعني القعود ذكر جهنم ولعلي أحدهم .
(الكتاب: تخويف من النار الابن الرجب الحنبلي)


அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னு ஹிஷாம் அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு நாள் நான் அப்துல்லாஹ் இப்னு ஹன்ழளா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களை நோய்விசாரிக்க சென்றேன். அன்னார் விரிப்பிலே கிடந்தார்கள்.
அது சமயம் ஒரு மனிதர் (பின்வரும்) வசனத்தை
لَهُمْ مِّنْ جَهَـنَّمَ مِهَادٌ وَّمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ‌ ؕ وَكَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ‏ 
அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு. இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
(சூரா : அஃராஃப்
வசனம்:41)
ஓதினார். உடனே அன்னார் அழ ஆரம்பித்தார்கள். அவர்களின் உயிர் பிரிந்து விடுமோ? என்று நினைத்தேன்.
இன்னும் அன்னார் நரகவாதிகள் பல படித்தரங்களில் இருப்பார்கள் என்று கூறி எழுந்து நிற்க முற்பட்டார்கள்.
அப்போது ஒருவர் “அபூ அப்துர் ரஹ்மான் அவர்களே அமருங்கள்” என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு ஹன்ழளா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் “நரகைப் பற்றிய செய்தி என்னை அமரவிடாமல் தடுக்கிறது ஏனெனில் நானும் அவர்களில் ஒருவனாக இருப்பேனோ?” என்று கூறினார்கள்.


【குர்ஆனின் வசங்களின் படி செய்ய சஹாபக்கள் காட்டிய ஆர்வம் நம்மை வியக்க வைக்கிறது】

 وإذا قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم ) أي : إذا ردوكم من الباب قبل الإذن أو بعده ( فارجعوا هو أزكى لكم ) أي : رجوعكم أزكى لكم وأطهر ( والله بما تعملون عليم.
وقال قتادة : قال بعض المهاجرين : لقد طلبت عمري كله هذه الآية فما أدركتها : أن أستأذن على بعض إخواني ، فيقول لي : " ارجع " ، فأرجع وأنا مغتبط [ لقوله ] ، ( وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم ) 


🌹🌹அல் குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தையும் வாழ்வில் கடைபிடிப்பதில் ஸஹாபாக்கள் கொண்டிருந்த ஆவல்🌹🌹
அடுத்து "திரும்பி போய்விடுங்கள் என்று கூறப்பட்டால், (அவ்வாறே) திரும்பிவிடுங்கள் அதுவே உங்களுக்கு தூய்மையானதாகும்."என அந்த வசனம் கூறுகின்றது. அதாவது அனுமதி அளிப்பதற்கு முன்போ அல்லது அனுமதியளித்த பின்போ அவர்கள் உங்களை வாசலோடு திருப்பி அனுப்பிவிட்டால் உடனே திரும்பி விடுங்கள் (இவ்வாறு) திரும்பி விடுவதுதான் உங்களுக்கு தூய்மையானதும் ஆகும்.
"நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் அறிகின்றவன் ஆவான்".
முஹாஜிர்களில் (புலம்பெயர்ந்தோரில்) ஒருவர் கூறியதாக கதாதா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த வசனத்தை (செயல்படுத்த) என் ஆயுள் முழுக்க வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவே இல்லை. அதாவது என் சகோதரர்களில் ஒருவரிடம்
(அவர் இல்லத்திற்கு செல்ல) நான் அனுமதி கேட்டு, அவர் 'திரும்ப போய்விடுக!' என்று சொல்ல, நான் இந்த வசனத்தச் செயல்படுத்திய மகிழ்வுடன் திரும்பிச் செல்கின்ற சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை.
ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ் "திரும்பி போய்விடுங்கள் என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால் (அவ்வாறே திரும்பி விடுங்கள். அதுவே உங்களுக்கு தூய்மையானதாகும். நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்". என்று கூறுகிறான்.


【இறைமறை ஓதப்படும் இல்லங்கள் விண்ணுலகிலிருந்து பார்க்கும் மலக்குகளுக்கு பிரகாசிக்கின்றன.】

" عن أبي هريرة رضى الله عنه قال : إن أهلَ السماء ليرَون بيوتَ أهلِ الذكر تُضيءُ لهم كما تضيء الكواكبُ لأهلِ الأرض. `` [عيون الأخبار 2 / 678


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது.அவர்கள் கூறினார்கள் :
பூமியிலுள்ளவர்களுக்கு நட்சத்திரங்கள் பிரகாசிப்பதை போன்று.
வானிலுள்ளவர்கள் (மலக்குகள்) திக்ரு செய்பவர்களின் இல்லங்களை தங்களுக்கு பிரகாசிக்ககூடியவைகளாக காண்பார்கள்.


【இறைமறையை காணாத நாளை நான் வெறுக்கின்றேன்】

قَالَ أَمِيرُ الْمُؤْمِنِينَ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ : " لَوْ أَنَّ قُلُوبَنَا طَهُرَتْ مَا شَبِعَتْ مِنْ كَلامِ رَبِّنَا , وَإِنِّي لأَكْرَهُ أَنْ يَأْتِيَ عَلَيَّ يَوْمٌ لا أَنْظُرُ فِي الْمُصْحَفِ " ، وَمَا مَاتَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ حَتَّى خُرِقَ مُصْحَفُهُ مِنْ كَثْرَةِ مَا كَانَ يُدِيمُ النَّظَرَ فِيهِ .
الكتاب: الأسماء والصفات للبيهقي


ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : அமீருல் முஃமினீன் உஸ்மான் இப்னு அப்ஃபான் (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்கள் :நம்முடைய உள்ளங்கள் பரிசுத்தம் அடைந்து விட்டால் நம்முடைய இறைவனின் வார்த்தையாகிய குர்ஆனை ஓதுவதிலிருந்து உள்ளத்தின் ஆசை அடங்காது. உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் குர்ஆனை அதிகம் பார்த்து ஓதியதால் அன்னார் மரணமடையும் போது அது கிழிந்து இருந்தது.


【நாம் அல்லாஹ்வை எந்த அளவு நேசிக்கின்றோம் என்பதை குர்ஆனுடன் நம்முடைய தொடர்பை வைத்து அறிந்துக் கொள்ளலாம்】

عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : " مَنْ كَانَ يُحِبُّ أَنْ يَعْلَمَ أَنَّهُ يُحِبُّ اللَّهَ عَزَّ وَجَلَّ ، فَلْيَعْرِضْ نَفْسَهُ عَلَى الْقُرْآنِ ، فَإِنْ أَحَبَّ الْقُرْآنَ فَهُوَ يُحِبُّ اللَّهَ تَعَالَى ، فَإِنَّمَا الْقُرْآنُ كَلامُ اللَّهِ غَيْرُ مَخْلُوقٍ ، فَمَنْ أَحَبَّ الْقُرْآنَ فَهُوَ يُحِبُّ اللَّهَ عَزَّ وَجَلَّ .
(الكتاب: أمالي ابن سمعون الواعظ)


: இப்னு மஸ்ஊது (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:
யார் தான்‌ அல்லாஹ்வை பிரியப்படுவதை ( பிரியத்தின் அளவை) அறிய விரும்புகிறாரோ அவர் குர்ஆனிடம் தன்னை எடுத்து காட்டட்டும்.
அவர் குர்ஆனை (ஓதுவதை) விரும்பினால் அவர் அல்லாஹ்வை விரும்புகிறார். குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாகும். அது படைக்கப்படவில்லை.
எவர் குர்ஆனை ( ஓதுவதை) விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வை விரும்புகிறார்.


【ரஹ்மத்துடைய மலக்குகளை நம்முடைய இல்லத்திற்கு அழைத்து வரும் அற்புத சக்தி குர்ஆனுக்கு மட்டுமே உண்டு】

عن أسيد بن الحضير قال : بينما هو يقرأ من الليل سورة البقرة ، وفرسه مربوطة عنده ، إذ جالت الفرس ، فسكت فسكنت ، ثم قرأ فجالت فسكت فسكنت ، ثم قرأ فجالت الفرس ، فانصرف ، وكان ابنه يحيى قريبا منها ، فأشفق أن تصيبه ، فلما اجتره رفع رأسه إلى السماء حتى ما يراها ، فلما أصبح حدث النبي صلى الله عليه وسلم فقال : اقرأ يا ابن حضير ، اقرأ يا ابن حضير . قال : فأشفقت يا رسول الله أن تطأ يحيى وكان منها قريبا ، فرفعت رأسي وانصرفت إليه ، فرفعت رأسي إلى السماء فإذا مثل الظلة ، فيها أمثال المصابيح ، فخرجت حتى لا أراها قال : أوتدري ما ذاك ؟ . قال : لا ، قال : الملائكة دنت لصوتك ، ولو قرأت لأصبحت ينظر الناس إليها لا تتوارى منهم . قال ابن الهاد : وحدثني هذا الحديث عبد الله بن خباب عن أبي سعيد الخدري عن أسيد بن حضير .
(الكتاب: صحيح البخاري)


உசைத் இப்னு ஹுளைர்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்
நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்தினேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக் காணமுடியவில்லை.
காலை நேரமானதுபோது நான் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் 'இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)' என்று கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். இறைத்தூதர் அவர்களே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நெருங்கியபோது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளிய வந்(து பார்த்)தபோது அதைக் காணவில்லை' என்று சொன்னேன். நபி(ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) அவர்கள், 'அது என்னவென்று நீ அறிவாயா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை (தெரியாது)' என்று சொன்னேன். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 'உன் குரலைக் கேட்டு நெருங்கிவந்த வானவர்கள் தாம் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள்; மக்களைவிட்டும் அது மறைந்திருக்காது' என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் தமக்குக் கிடைத்துள்ளதாக அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னுல் ஹாதி(ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்.


【பருவ வயதைக் கூட அடையாத சிறுவரை ஆட்சி மன்ற குழுவிலே பெரும் சஹாபாக்களோடு அமரும் தகுதியை தந்த அற்புத குர்ஆன்】

حدثنا محمد بن عرعرة حدثنا شعبة عن أبي بشر عن سعيد بن جبير عن ابن عباس قال كان عمر بن الخطاب رضي الله عنه يدني ابن عباس فقال له عبد الرحمن بن عوف إن لنا أبناء مثله فقال إنه من حيث تعلم فسأل عمر ابن عباس عن هذه الآية إذا جاء نصر الله والفتح فقال أجل رسول الله صلى الله عليه وسلم أعلمه إياه قال ما أعلم منها إلا ما تعلم
الكتاب : صحيح البخاري


: இப்னு அப்பாஸ்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்
உமர் இப்னு கத்தாப்(ரலியல்லாஹு அன்ஹு) எப்போதும் தன்னைத் தம் அருகிலேயே வைத்திருப்பார்கள். எனவே, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலியல்லாஹு அன்ஹு) உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், 'எங்களுக்கு அவரைப் போன்ற மகன்கள் (பலர்) இருக்கிறார்களே (அவர்களையெல்லாம் நீங்கள் உங்கள் அருகில் வைத்துக் கொள்வதில்லையே ஏன்?)' என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அவை, 'அது உங்களுக்குத் தெரிகிற (அவர் ஒரு கல்வியாளர் என்ற) காரணத்தால் தான்' என்று பதிலளித்தார்கள். பிறகு என்னிடம், 'அல்லாஹ்வின் உதவியும் (அவன் தரும்) வெற்றியும் வந்து விடும் போது' என்னும் (திருக்குர்ஆன் 110:1-வது) இறைவசனத்தைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். அதற்கு நான், 'அது 'இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்நாள் முடியப்போகிறது' என்று அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்த வசனமாகும்' என்று பதிலளித்தேன். உடனே உமர்(ரலியல்லாஹு அன்ஹு), 'நீங்கள் அறிகின்றதையே அதிலிருந்து நானும் அறிகிறேன்' என்று கூறினார்கள்.


【திருக் குர்ஆனோடு கொண்டிருந்த தொடர்பு ஒரு மனிதரின் பெயரை அல்லாஹ்வே கூறி நபிக்கு அந்த மனிதரிடம் இறைவசனத்தை ஓதிக்காட்ட கூறினான்.】

  وعن أنس قال : قال رسول الله - صلى الله عليه وسلم - لأبي بن كعب : " إن الله أمرني أن أقرأ عليك القرآن " قال : آلله سماني لك ؟ قال : " نعم " قال : وقد ذكرت عند رب العالمين ؟ قال : " نعم " فذرفت عيناه ، 
متفق عليه


கஃஅபு (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் “ நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் குர்ஆனை ஓதிக் காட்ட கட்டளையிட்டுள்ளான்” என்று கூறினார்கள்.
 அதற்கு கஃஅபு (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ( ஆனந்த பரவசம் அடைந்து) உங்களிடம் அல்லாஹ் என் பெயரை கூறினானா? என்று வினவினார்கள்.
 அதற்கு நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் “ஆம்” என்று கூறினார்கள்.
அதற்கு கஃஅபு (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹாவின் சமூகத்தில் என் பெயர் கூறப்பட்டு விட்டதா? என்று (ஆனந்தத்தில்) வினவினார்கள்.
அதற்கு நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் “ஆம்” என்று கூறிய உடன் அன்னாரின் கண்கள் கண்ணீரை கொண்ட ஆரம்பித்தன.










Friday, 18 May 2018

பணிவு என்னும் அருங்குணம்

【மாமன்னரிடம் இருந்த பணிவு】

كان عمربن عبد العزيز رحمه الله يخدم الضيوف بنفسه ويقوم بصلح المصباح فاذا قيل له في ذالك ؟ يقول:  قمت وأنا عمر وجلست وأنا عمر.
( تنبيه المغترين للإمام الشعراني صفحة :٣٠٥)

கலீபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்  விருந்தினருக்கு  தானே முன்னின்று (பணியாட்களுக்கு கட்டளையிடாமல்) விரும்தோம்பல் செய்வார்கள்.

(இரவிலே) தானே (பணியாட்களுக்கு உத்திரவிடாமல்) எழுந்து சென்று விளக்கை சரி செய்வார்கள்.

 இதுகுறித்து அவர்களிடம் வினவப்பட்டது.

அதற்கு கலீபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : நான் எழுந்து செல்லும்போது உமராகத் தான் இருந்தேன்.வந்து அமர்ந்த பின்பும் உமராகத் தான் இருந்தேன். (எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை)
     
                                                         

(பணிவினால் கிடைத்த பயன்)                           

أحمد الرفاعيّ رضِيَ الله عنه كان أشدّ الناس تواضعًا في زمانه، واحد كان من اليهود سمِعَ أنَّ أحمد الرفاعيّ يقولون عنه أنَّه شديد التواضع، قال لأُجرّبَنَّهُ فيما يقولون عنه ، فذهب إليه وكان مع السيِّد أحمد جماعةٌ من جماعته، وكان في تلك الناحية "كلب" فقال لأحمد الرفاعيّ:  أنتَ أفضل أم هذا الكلب؟
قال له : إِنْ نجَوْتُ على الصراطِ فأنا خيرٌ منه
الرجل بُهِرَ بذلك فأسلمَ وذهب وأخبرَ أهلهُ فأسلموا،

அஹ்மது ரிஃபாயி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அக்காலத்தில் மக்களிலேயே மிகவும் பணிவு மிக்கவராக இருந்தார்கள். இவ்வாறு மக்கள் பேசிக் கொள்வதைக் கேட்ட யூதன் ஒருவன் அன்னாரை சோதித்து பார்க்க எண்ணினான். ஒருநாள் அன்னார் தன் சீடர்களோடு இருந்தார்கள். நாய் ஒன்று ஒரு ஓரமாய் நின்று கொண்டிருந்தது.அது சமயம் அங்கே வந்த யூதன் அன்னாரை பார்த்து " நீங்கள் மிகவும் சிறப்பிற்குரியவரா அல்லது இந்த நாய் மிகவும் சிறந்ததா? என் கேட்டான்.

அதற்கு ரிபாய் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் " சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடந்து நான் வெற்றி பெற்றுவிட்டால் நான் அந்த நாயை விட நான் சிறந்தவன் " என்று அவனிடம் கூறினார்கள்.
இந்த பதிலால் அந்த யூதன் திகைப்பில் ஆனான்.
பின்பு இஸ்லாத்தை தழுவினான். தன்‌ குடும்பத்தினரிடம் இந்த நிகழ்வை அவன் கூற அவர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள்.

   
               

【யாரையும் இழிவாக எண்ணாதே!】

خرج عيسى عليه السلام ومعه صالح من صالح بنى اسرائيل فتبعهما رجل خاطىء مشهور بالفسق فيهم ، فقعد منتبذا عنهما ، منكسرا ، فدعا الله سبحانه وقال : اللهم اغفر لى.
ودعا هذا الصالح وقال اللهم لا تجمع غدا بينى و بين ذلك العاصى.
فا و حى الله تعالى الى عيسى عليه السلام : انى قد استجبت دعاءهما جميعا ، رددت ذلك الصالح ، وغفرت لذلك المجرم .

(الكتاب:  رسالة القشيرية صفحة: 242)

ஈஸா (அலைஹிஸ்ஸலாம்)அவர்கள் வெளியே சென்றார்கள். அப்போது அன்னாருடன் பனூஇஸ்ரவேலர்களைச் சார்ந்த நல்ல மனிதர்களில் ஒருவரும்  சென்றார்.

 அப்போது அந்த இருவரையும் ஒரு மனிதர் பின்தொடர்ந்து வந்தார். அவரோ அந்த மக்களிலே பெரும்பாவி என்று மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர்.
அந்த மனிதர் தான் செய்த பாவத்தை நினைத்து மனம் உடைந்தவராக அந்த இருவரை விட்டு ஒதுங்கி ஒரு மூளையில் அமர்ந்தார்.

அப்போது அந்த மனிதர் அல்லாஹ் இடத்திலே (பின்வருமாறு) துஆ செய்தார் யா அல்லாஹ்! என்னை மன்னித்து விடுவாயாக!

ஆனால் அந்த ஈஸா நபியுடன் வந்த நல்ல மனிதர் “யா அல்லாஹ்! நாளை மறுமையிலே என்னையும் இந்த பாவியையும் ஒன்று சேர்த்து விடாதே என்று பிரார்த்தனை செய்தார்.

அப்போது ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அல்லாஹ் (பின்வருமாறு) வஹி அறிவித்தான்.

“நான் நான் இருவரின் துஆவிற்கும் பதிலளித்துவிட்டேன். நான் அந்த நல்ல மனிதரை நிராகரித்து விட்டேன்.
அந்த குற்றம் செய்த மனிதரை மன்னித்து விட்டேன்” என்று அல்லாஹ் கூறினான்.



【பணிவுக்கு கிடைத்த சன்மானம்】
               

قال الفضيل:  أوحى الله سبحانه وتعالى إلى الجبال أني متكلم على واحد منكم نبيا فطاولت الجبال وتواضع طور سيناء فكلم الله سبحانه عليه موسى عليه السلام لتواضعه
(الكتاب:  رسالة القشيرية صفحة:  268)

ஃபுழைல் இப்னு இயாழ்(ரஹிமஹுமுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ் எல்லா மலைகளிடத்திலேயும் (பின்வருமாறு) “நிச்சயமாக நான் உங்களில் ஒருவரின் மீது ஒரு நபியிடத்திலே  பேசப்போகிறேன்”  என்று வஹீ அறிவித்தான்.

எல்லா மலைகளும் (அல்லாஹ் என் மேல் வைத்து தான் பேசப்போகிறான் என்று) பெருமையடித்துக் கொண்டன. ஆனால் தூர்சீனா மலை மட்டும் பணிவேடு இருந்தது.

அது பணிவாக இருந்ததின் காரணத்தினால் தான் அல்லாஹ் அந்த மலையின் மீது வைத்து மூஸா நபியிடம் பேசினான்.



 【எவ்வளவு உயர்ந்த மனிதனிடம் இவ்வளவு பணிவா?】

قال عمر بن الخطاب رضي الله عنه لو نادى مناد من السماء : ياأيها الناس انكم داخلون الجنة كلكم إلا رجلا واحدا لخفت أن أكون أنا هو
(الكتاب:  التخويف من النار لإبن رجب صفحة:  ١٧)


உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள் :

வானத்திலிருந்து ஒரு அறிவிப்பாளர்  " மக்களே நிச்சயமாக நீங்கள் அனைவரும் சுவர்க்கம் செல்லக்கூடியவர்களாகயிருக்கும். ஒரே ஒரு மனிதரை தவிர" என்று அறிவிப்பு செய்தால் அந்த ஒருவர் நானாக இருப்பேனோ என்று  அஞ்சுகிறேன்.

(மிகப்பெரும் பொறுப்பும் மிகப்பெரும் பணிவும்)

وقد ولي أبو هريرة رضي الله عنه من قبل معاوية بن ابي سفيان اكثر من مرة فلم تبدل الولاية من سماحة طبعه وخفة ظله شيئا فقد مر باحد طرق المدينة وهو وال عليها وكان يحمل الحطب على ظهره لاهل بيته فمربثعلبة بن مالك فقال له: اوسع الطريق للأمير يا بن مالك فقال له: يرحمك الله أما يكفيك هذا المجال كله؟ فقال أوسع الطريق للأمير وللحزمة التي معه
(الكتاب: صورمن حياة الصحابة )

அபூ ஹுரைரா ( ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் ,முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு)அவர்களின் மூலம் மதீனா நகருக்கு பலமுறை கவர்னராக பொறுப்பேற்றார்கள். அந்த பதவி அவர்களின் எளிமையான குணத்தையோ، இனிமையான ஆன்மாவையோ, எதையும் மாற்றவில்லை.

(ஒருநாள்) மதீனாவிற்கு கவர்னராகயிருக்கும்போது தன் குடும்பத்திற்காக(தேவைக்காக) தன்முதுகிலே விறகுகட்டை சுமந்துகொண்டு மதீனத்து வீதீகளில் ஒன்றில் நடந்து சென்றார்கள்.

அதுசமயம் சஹ்லபா இப்னு மாலிக்( ரலியல்லாஹு அன்ஹு ) அவர்களை கடந்து செல்லும்போது "கவர்னருக்கு வழிவிடுங்கள் இப்னு மாலிக்கே! என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ் உமக்கு ரஹ்மத் செய்வானாக இந்த இடைவெளி உமக்கு போதாதா? என்று கேட்டார்.
அப்போது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் " கவர்னருக்கும், அவரின் முதுகிலுள்ள விறகுகட்டுக்கும் (சேர்த்து) வழிவிடுங்கள் என்று கூறினார்கள்.

(மிகப்பெரும் மனிதரின் மகத்தான பணிவு)

ان ابا حنيفة (رحمه الله)  قام الليل كله وهو يردد قوله جل وعز (بل الساعة موعدهم،  والساعة ادهى وأمر)وهو يبكي من خشية الله بكاء يقطع نياط القلوب.
(صور من حياة التابعين)

இமாம் அபூ ஹனீஃபா
(ரஹிமஹுல்லாஹ்)
அவர்கள் இரவு முழுவதும் இந்த வசனத்தை

(இறுதித்தீர்ப்பு நாள் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும்; இறுதித் தீர்ப்பு நாள் மிகக் கடுமையானதாகும், மிகக் கசப்பானதாகும்.சூரா அல் கமர் -54:46 )

 திரும்ப திரும்ப ஒதி நின்று வணங்கினார்கள். இன்னும் அல்லாஹ்வின் அச்சத்தால் இதயத்தின் இரத்த நாளங்கள் துண்டிக்கப்படும் அளவுக்கு அழுதார்கள்.



சாமானிய பெண்ணிடம் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஜனாதிபதியின் பணிவு)

، عَنْ قَتَادَةَ ، قَالَ : خَرَجَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنَ الْمَسْجِدِ ، وَمَعَهُ الْجَارُودُ الْعَبْدِيُّ ، فَإِذَا بِامْرَأَةٍ بَرِزَةٍ عَلَى ظَهْرِ الطَّرِيقِ ، فَسَلَّمَ عَلَيْهَا ، فَرَدَّتْ عَلَيْهِ السَّلَامَ ، وَقَالَتْ : إِيهًا يَا عُمَرُ ، عَهِدْتُكَ وَأَنْتَ تُسَمَّى عُمَيْرًا فِي سُوقِ عُكَاظٍ ، تَرْعَى الصِّبْيَانَ بِعَصَاكَ ، فَلَمْ تَذْهَبِ الأَيَّامُ ، حَتَّى سُمِّيتَ عُمَرًا ، ثُمَّ لَمْ تَذْهَبِ الأَيَّامُ حَتَّى سُمِّيتَ أَمِيرَ الْمُؤْمِنِينَ ، فَاتَّقِ اللَّهَ فِي الرَّعِيَّةِ ، وَاعْلَمْ أَنَّهُ مَنْ خَافَ الْوَعِيدَ قَرُبَ عَلَيْهِ الْبَعِيدُ ، وَمَنْ خَافَ الْمَوْتَ خَشِيَ الْفَوْتَ ، فَقَالَ الْجَارُودُ : أَكْثَرْتِ أَيَّتُهَا الْمَرْأَةُ عَلَى أَمِيرِ الْمُؤْمِنِينَ ، فَقَالَ عُمَرُ : دَعْهَا ، أَمَا تَعْرِفُهَا ؟ هَذِهِ خَوْلَةُ بِنْتُ حَكِيمٍ الَّتِي سَمِعَ اللَّهُ قَوْلَهَا مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ ، فَعُمَرُ أَحَقُّ أَنْ يَسْمَعَ لَهَا .
( الكتاب:  موطأ مالك)

ஒரு நாள் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்  ஜாரூது (ரலியல்லாஹு அன்ஹு) என்ற நபித்தோழருடன்  கடைவீதிக்கு சென்றார்கள். அப்போது அங்கு வயதான பெண்மணி ஒருவர் இருந்தார். அவருக்கு உமர் (ரலியல்லாஹு  அன்ஹு) அவர்கள் ஸலாம் கூறினார்கள்.

 அந்த வயதான பெண்ணும் பதில் கூறினார்கள். 

"உமரே நில்லுங்கள் நீங்கள் (மக்கத்து கடைவீதியான)  சூகே உகாழில் உமைர் அழைக்கப்பட்டபோதும் ,நீங்கள் சிறுவர்களுடன் மல்யுத்தம் செய்தபோதும் (அந்த நாள் முதல்)  உம்மை நான் அறிவேன்.    (சில) காலங்கள் கூட செல்லவில்லை அதற்குள் உமர் என்று கேள்விப்பட்டேன். பின்பு சில காலங்களுக்குள் கலீபா என்று கேள்விப்படுகிறேன்.
நீங்கள் குடிமக்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அறிந்துக்கொள்ளுங்கள் யார் மரணத்தை அஞ்சுகிறாரோ அவர் தான் (நல்ல அமலுக்கான) வாய்ப்பு தவறிப்போவதை அஞ்சுவார்"  என்று அந்த வயதான பெண்மணி கூறினார்.

 இதைக்கேட்டு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அழுதுவிட்டார்கள்.

 ஜாரூது (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்  அந்த வயதான பெண்மணியை பார்த்து "கலீபாவிடம்  துணிச்சலாக நடந்து அழவைத்துவிட்டியே " என்று கூறினார்கள்.

அதற்கு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அந்த வயதான பெண்மணியை விட்டு விடும்படி சைக்கினை செய்தார்கள். 

ஜாரூது ( ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்  பேச்சை நிறுத்தியதும் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவர்களிடம் இந்த பெண்மணியை பற்றி அறிவீரா? என்று வினவ, அவர்கள் தெரியாது என்றார்கள்.

 உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் " இந்த பெண்மணி கவுலா பின்த் ஹகீமாகும். இவர்கள் எத்தகைய பெண்மணி என்றால் இந்த பெண்மணியின் வார்த்தையை அல்லாஹ்வே செவிமடுத்துள்ளான்.  எனவே இந்த பெண்மணியின் வார்த்தையை செவிமடுக்க  உமர் தகுதியுள்ளவர்தான்" என்று கூறி பின்வரும் வசனத்தை சுட்டி காட்டினார்கள்.
 (நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.
( சூரத்துல் முஜாதலா :
வசனம் -)

Thursday, 10 May 2018

பேணுதலான வாழ்வே பயனுள்ள வாழ்வு

பேணுதலான வாழ்வே பயனுள்ள வாழ்வு

كان فضيل بن عياض رحمه الله يقول: لا خير في فقه لا ورع فيه كما لاخير في صلاة لا خشوع فيها ‘ ولا مال لا جود فيه.
(الكتاب تنبيه المغترين للإمام شعراني صفحة: ١٩٨)

புழைல் இப்னு இயாழ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:

அச்சமில்லாத தொழுகையில் எந்த சிறப்பும் இல்லாதது போன்றும்

தர்மம் கொடுக்காத செல்வத்தில் எந்த சிறப்பும் இல்லாதது போன்றும்

பேணுதல் இல்லாத மார்க்க கல்வியிலும் எந்த சிறப்பும் இல்லை.


(பேணுதலில் உறுதிமிக்கவர்)

                   

 أن أبا عبد الله الحارث بن اسد المحاسبي  ورث من ابيه سبعين ألف درهم فلم يأخد منه شيئا قيل لأن أباه كان يقول بالقدر فرأى من الورع أن لا يأخد من ميراثه شيئا
ان النبي صلى الله عليه وسلم لايتوارث أهل ملتين شيئا
(الكتاب:  رسالة القشيرية صفحة:  57)
   
அபூ அப்துல்லாஹ் அல்ஹாரிஸ் பின் அல் முஹாசிபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் : தன் தந்தையிடமிருந்து எழுபதாயிரம் திர்ஹம் தொகைக்கு வாரிசாக இருந்தும் அவற்றிலிருந்து ஒரு திர்ஹத்தை கூட அன்னார் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு காரணம் அன்னாரின் தந்தை, விதியை மறுப்பவராக இருந்தார் என்றும், தந்தையின்  சொத்திலிருந்து எதையும் எடுக்காமலிருப்பதே பேணுதல் என்றும் கருதினார்கள் எனக் கூறப்படுகிறது.

قال رسول الله صلى الله عليه وسلم : لايتوارث أهل ملنتين شيئا

இரு வேறு மார்க்கத்தைச் சார்ந்தவர்கள் ஒருவர் மற்றவருக்கு ஒருபோதும் வாரிசாக மாட்டார்கள் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
                   

【சட்ட மேதைகளின் பேணுதல்】

رهن أحمد بن حنبل سطلا له عند بقال بمكة فلمّا أراد فكاكه أخرج البقال إليه سطلين وقال خذ أيّهما هو لك ،
فقال أحمد أشكل عليّ سطلي فهو لك والدراهم لك،
فقال البقال سطلك هذا، وأنا أردت أن أجرّبك،
فقال:  لا آخذه ومضى وترك السطل عنده
(الكتاب:  رسالة القسيرية صفحة: 214)

அஹமது இப்னு ஹம்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மக்காவிலே உள்ள காய்கறி வியாபாரியிடம் தன்னுடைய செம்பு வாளியை அடமானம் வைத்தார்கள்.

அந்த வாளியை விடுவிக்க அன்னார் நாடிய போது, அந்த வியாபாரி இரண்டு வாளிகளை அவர்களிடத்தில் காண்பித்து உங்களின் வாளி எதுவோ? அதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

அப்போது அஹமது இப்னு ஹம்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் என்னுடைய எது என்று வாளி எனக்கு குழப்பமாகி விட்டது.

எனவே அந்த வாளியையும், இந்த  திர்ஹத்தையும் நீயே வைத்துக் கொள் என்றார்கள்.

உடனே அந்த காய்கறி வியாபாரி “இது தான் உங்களின் வாளியாகும்". நான் உங்களை சோதித்து பார்க்க நாடினேன் என்று கூறினார்.

அதற்கு அஹமது இப்னு ஹம்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் நான் அதை எடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டு அந்த வாளியை அவரிடத்திலேயே விட்டு விட்டு சென்று விட்டார்கள்.



【ஹதீஸ் கலை வல்லுனர்களின் பேணுதல்】

واستأجر النخعي دابة فسقط سوطه من يده فنزل ‘ وربط الدابة ‘ ورجع فأخذ السوط فقيل له: لو حولت الدابة إلى الموضع الذي سقط فيه فأخذته كان اسهل لك فقال إنما إستأجرتها لأمضي هكذا ..لاهكذا.
(الكتاب:  رسالة القشيرية صفحة: 214)

நகயீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஒரு பிராணியை வாடகைக்கு எடுத்தார்கள்.

 அன்னார் பயணிக்கும் போது அன்னார் கையில் இருந்த சாட்டை கீழே விழுந்து விட்டது.

 உடனே அன்னார் கீழே இறங்கி வாகனத்தை கட்டிவிட்டு திரும்ப சென்று அந்த சாட்டையை எடுத்து வந்தார்கள்.

அப்போது அன்னாரிடம் நீங்கள் சாட்டை விழுந்த இடத்தை நோக்கி வாகனத்தை திருப்பி சென்று நீங்கள் எடுத்து இருக்கலாமே? அது உங்களுக்கு மிக எளிதாக இருந்திருக்குமே? என்று வினவப்பட்டது.

அதற்கு அன்னார் நான் அந்த வாகனத்தை ஒருமுறை சென்று வர தான் வாடகைக்கு எடுத்தேன். இவ்வாறு இடையில் ஒரு முறை சென்று திரும்பி வருவதற்கும் சேர்த்து வாடகைக்கு எடுக்கவில்லை என்று கூறினார்கள்.

سيّب ابن المبارك دابة قيمتها كثيرة ‘ وصلى صلاة الظهر ‘ فرتعت الدابة في زرع قرية سلطانية فترك ابن المبارك الدابة ولم يركبها
(الكتاب: رسالة القشيرية صفحة: 214) 
     
இப்னு முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அதிக விலைமதிப்புள்ள பிராணியை அவிழ்த்து விட்டு லுஹர் தொழுகை தொழுதார்கள்.

 அந்த பிராணி அரசுக்கு சொந்தமான ஒரு நிலத்திலே  மேய்ந்து விட்டது.

ஆகயால் அந்த பிராணியை இப்னு முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அதில் பயணிக்காமல் அங்கேயே விட்டுவிட்டார்கள்.



【சிறிய விஷயங்களிலும் பேணுதல் அவசியமே!】

كان ابو صالح حمدون عند صديق له‘ وهو في النزع فمات الرجل فنفث ابو صالح في السراج فقيل له في ذلك فقال:   الى الآن كان الذهن له في السرجة ‘ ومن الآن صار للورثة. اطلبوا ذهنا غيره.

(الكتاب:  رسالة القشيرية صفحة:213)

அபூ சாலிஹ் ஹம்தூன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், உயிர் பிரியும் தருவாயிலே இருந்த தன் நண்பருக்கு அருகே அமர்ந்து இருந்தார்கள். அப்போது அவர் மரணமடைந்த உடன் அருகே இருந்த விளக்கை ஊதி அனைத்து விட்டார்கள்.

அப்போது ஏன் விளக்கை அனைத்தீர்கள்? என்று வினவப்பட்டது.

அதற்கு அன்னார் (பின்வருமாறு) கூறினார்கள் விளக்கிலே உள்ள எண்ணெய்  இதுவரை இவருக்கு சொந்தமாக இருந்தது. இப்போது முதல் அது அவரின் வாரிசுகளுக்கு சொந்தமாக  ஆகிவிட்டது.

எனவே வேறு ஒரு எண்ணெயை தேடிக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள்.

مر عيسى بن مريم عليهما السلام بمقبرة ‘ فنادى رجلا منها فأحياه الله تعالى فقال من أنت؟  فقال كنت حمالا انقل للناس فنقلت لإنسان يوما حطبا‘ فكسرت منه خلالا تخللت به فأنا مطالب به منذ مت
(الكتاب: رسالة القشيرية صفحة:215)

ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு கப்ரை கடந்து சென்றார்கள்.

 அப்போது அந்த கப்ரிலிருந்த மனிதனை அன்னார் அழைத்தபோது அல்லாஹ் அவருக்கு உயிர் கொடுத்தான்.

அப்போது ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவரிடம் நீ யார்? என்று வினவினார்கள்.

அதற்கு அவர் “நான் மக்களுக்காக பொருட்களை எடுத்துச் செல்லும் சுமைத்தூக்கும் தொழிலாளியாக இருந்தேன்.

ஒரு நாள் ஒரு மனிதருக்காக விறகு கட்டை தூக்கிச் சென்றேன். அப்போது அந்த விறகு கட்டிலிருந்து பல் குத்துவதற்காக  ஒரு குச்சியை  உடைத்து விட்டேன். அதற்காக நான் மரணத்ததிலிருந்து விசாரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றேன்” என்று கூறினார்.



【சிறிய விஷயங்களில் கூட பேணுதலில் அலட்சியம் வேண்டாம்!】

خاطت رابعة العدوية شقا في قميصها في ضوء مشعلة سلطان ‘ فقدت قلبها زمانا حتى تذكرت ‘ فشقت قميصها ‘ فوجدت قلبها
(الكتاب:  رسالة القشيرية صفحة: 215)

ராபியத்துல் அதவிய்யா (ரஹிமஹல்லாஹு) அவர்கள் அரசுக்கு சொந்தமான விளக்கின் வெளிச்சத்தில் தன்னுடைய கிழிந்த சட்டையை தைத்தார்கள்.

அதன் காரணமாக பலநாட்கள் உள்ளத்தின் பிரகாசத்தை இழந்தார்கள்.

பிறகு அன்னாருக்கு அது குறித்த காரணம் நினைவுக்கு வந்தவுடன் தான் தைத்த சட்டையை கிழித்து விட்டார்கள்.

அதன் பிறகு இதயத்தின் பிரகாசத்தை பெற்றுக்கொண்டார்கள்.

كان حسان بن ابي سنان لا ينام مضطجعا‘ ولايأكل سمينا‘ ولا يشرب ماء باردا سنين سنة ‘فرئى في المنام بعد موته‘ فقيل له:  ما فعل الله بك؟  فقال خيرا‘ إلا أنِّي محبوس عن الجنة بإبرة استعرتها فلم أردّها
(الكتاب:  رسالة القشيرية  صفحة: 215)

ஹஸ்ஸான் இப்னு அபூ ஸினான் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பல வருடங்கள்  உறங்கும் போது மல்லாந்து படுக்காதவராகவும், தரமான உணவை உண்ணாதவராகும், குளிர்ந்த நீரைக் கூட அருந்தாதவராகவும் இருந்தார்கள்.

அன்னார் மரணத்திற்கு பின்பு கணவிலே பார்க்கப்பட்டார்கள். அப்போது அன்னாரிடம் அல்லாஹ் உங்களிடம் எவ்வாறு நடந்து கொண்டான்? என்று வினவப்பட்டது.

அதற்கு ஹஸ்ஸான் இப்னு அபூ ஸினான் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் “நல்லவிதமாக நடந்துக் கொண்டான். இருந்தபோதிலும்  ஒரு மனிதரிடம் ஊசியை நான் இரவலாக பெற்றேன். ஆனால் அதை நான் திரும்ப ஒப்படைக்கவில்லை. அதன் காரணமாக சுவனத்தை விட்டும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.

كان لعبد الواحد بن زيد غلام خدمه سنين‘ وتعبد أربعين سنة وكان في ابتداء أمره كيالا ‘ فلمّا مات رئي في المنام ‘ فقيل له: ما فعل الله بك؟ فقال: خيرا غير أنّي محبوس عن الجنة ‘ وقد أخرج عليّ من غبار القفيز الذي اكتلته أربعين قفيزا
(الكتاب:  رسالة القشيرية صفحة:  215)

அப்துல் வாஹித் இப்னு ஜைது (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு ஒரு அடிமை இருந்தார். மேலும் அவர் ஆண்டுகள் அன்னாருக்கு பணிவிடை செய்தார். நாற்பது ஆண்டுகள் அவர் வணக்கவழிபாடு செய்தார். அந்த அடிமை ஆரம்பகாலத்திலே தாணியங்களை அளந்து கொடுக்கும் தொழிலாளியாக இருந்தார்.

அந்த அடிமை மரணித்த பிறகு அவரை கனவிலே பார்க்கப்பட்டது. “அவரிடம் அல்லாஹ் உங்களிடம் எப்படி நடந்துக் கொண்டான்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “நல்ல விதமாக நடந்துக் கொண்டான். இருந்த போதிலும் நான் சுவனத்த விட்டு தடுக்கப்பட்டுள்ளேன்.
மேலும் ஒரு சமயம் நான் நாற்பது முறை மரக்காலை கொண்டு தானியங்களை அளந்தேன்.
 அந்த மரக்காலிருந்து என் என் மீது தூசி வந்துக் கொண்டேயிருக்கிறது” என்று கூறினார்.

(அதற்கு காரணம் தாணியங்களை அளக்கும்போது அதிலே இருக்கும் தூசிகளும், பொடி மண்ணும் மரக்காலில் ஒட்டிக் கொள்ளும். ஒவ்வொரு முறையும் மரக்காலை துடைத்து சுத்தம் செய்யாமல் தொடர்ந்து அளக்கும் போது தாணியத்தின் அளவு கொஞ்சம் குறைந்து விடுகிறது. ஆகயால் அதிலும் பேணுதல் அவசியம்)



【பேணுதலுக்கு கிடைத்த பரிசு】

رئى سفيان الثوري في المنام‘وله جناحان يطير بهما في الجنة من شجرة إلى شجرة.
فقيل له بم نلت هذا؟  فقال بالورع.
(الكتاب:  رسلة القشيرية صفحة:215)

சுஃப்யானுஸ் ஸவ்ரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கனவிலே காணப்பட்டார்கள். அவர்களுக்கு இரு இறக்கைகள் இருந்தன. அவற்றின் மூலம் ஒரு மரத்திலிகுந்து மற்றொரு மரத்திற்கு பறந்து சென்றுக் கொண்டிருந்தார்கள்.

அன்னாரிடம் “நீங்கள் எப்படி இந்த அந்தஸ்தை அடைந்தீர்கள்?” என்று வினவப்பட்டது.

அதற்கு சுஃப்யானுஸ்  ஸவ்ரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் “பேணுதலைக் கொண்டு அடைந்தேன்” என்றார்கள்.




                                                【இதுவும் லஞ்சம் தான்】

عن الشعبي قال:  كان رجل يهدي لعمر بن الخطاب ( كل)  عام فخد جزور  فخاصم إليه رجلا فقال:  يا أمير المؤمنين اقض بيننا قضاء فصلا  كما يفصل الرجل من سائر الجزور.  قال:  فقضي عليه عمر   . ثم كتب إلي عماله إن الهدايا هي الرشا.
(موسوعة ابن ابي الدنيا الجزء الاول صفحة -٢٢٠)

ஹதீஸ் கலை வல்லுனர் ஷுஃபீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்  :
ஒரு மனிதர் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஒட்டகத்தின் தொடை கறியை அன்பளிப்பு செய்பவராக இருந்தார்.

அந்த மனிதர்
(ஒரு சமயம்) உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஒரு மனிதர் மீது வழக்குதொடுத்தார். அப்போது(தான் கொடுத்த அன்பளிப்பை நினைவூட்டும் விதமாக)  " கலீபா அவர்களே ஒட்டகைகளிருந்து காலை (தொடை கறியை) பிரித்தெடுப்பது போன்று எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள் என்று கூறினார்.

ஷுஃபீ
 (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
"உமர் ( ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அந்த மனிதருக்கு எதிராக தீர்ப்பளித்தார்கள்".

பிறகு தன்னுடைய அரசு  அதிகாரிகளுக்கு "நிச்சயமாக (உங்களுக்கு வழங்கப்படும்) அன்பளிப்புகள் அனைத்தும் லஞ்சம் தான்" என்று கடிதம் எழுதினார்கள்.
....................................................


【பேணுதலின் சிகரம்】

إسماعيل بن محمد بن سعد بن أبي وقاص - رضي الله عنه - قال: قدم على عمر - رضي الله عنه - مسك وعنبر من البحرين فقال عمر: والله لوددت أني وجدت امرأة حسنة الوزن تَزِنُ لي هذا الطيب حتى أقسمه بين المسلمين، فقالت له امرأته عاتكة بنت زيد بن عمرو بن نفيل: أنا جيدة الوزن فهلمَّ أزِن لك، قال: لا، قالت: لِمَ؟ قال: - إني أخشى أن تأخذيه فتجعليه هكذا وأدخل أصابعه في صدغيه وتمسحي به عنقك، فأصيب فضلا على المسلمين (الكتاب:  الهد صفحة - ١٤٨)

இஸ்மாயீல் பின் முஹம்மது (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் :

உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு பஹ்ரைனிலிருந்து கஸ்தூரியும் ,அம்பர் என்ற வாசனை திரவியமும் வந்தது.

 அப்போது உமர் (ரலியல்லாஹு அன்ஹு) "அல்லாஹ் மீது ஆணையாக எனக்கு இந்த நறுமண  பொருளை அழகியமுறையில் நிறுத்து தரும் ஒரு பெண்ணை நான் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். பிறகு முஸ்லிம்களுக்கு நான் அதனை பங்கீடு செய்வேன்" என்று கூறினார்கள்.

 அதுசமயம் அவர்களின் மனைவி ஆதிக்கா பின்த் ஜைது (ரலியல்லாஹு அன்ஹா) "நான் நன்றாக நிறுப்பேன். என்னிடம் தாருங்கள் நான் உங்களுக்கு நிறுத்து தருகிறேன் என்று கூறினார்கள்.

 உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வேண்டாம் என்று கூறினார்கள்.

ஆத்திக்கா (ரலியல்லாஹு அன்ஹு ) ஏன் என்று வினவினார்கள்.

அதற்கு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) "நிச்சயமாக நான் "நீ அதை எடுத்து இப்படி செய்துவிடுவாயோ அதாவது உமர் (ரலியல்லாஹு அன்ஹு) தன் விரல்களை தன்னுடைய இரு நெற்றி பொட்டில் (முடியில்) நுழைத்து(இப்படி) உன் கழுத்தில் தடவிக்கொள்வாய். அதனால் மற்ற முஸ்லிம்களை விட அதிகமாக (என்பங்கில்) நான் பெற்றுக்கொண்டதாக ஆகிவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள்.
...................................................



【உலக வரலாற்றில் அதிசய ஜானாதிபதி】

وعن قتادة رضي الله عنه أن عمر بن الخطاب رضي الله عنه أبطأ عن الناس يوم الجمعة، قال: ثم خرج فاعتذر إليهم في احتباسه وقال: إنما حبسني غسل ثوبي هذا، كان يُغسل ولم يكن لي ثوب غيره)
(الكتاب:  الزهد للامام احمد صفحة -١٥٤)

கதாதா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்:

உமர் (ரலியல்லாஹு அன்ஹு) ஜும்ஆ தினத்தன்று மக்களிடேயே  (தொழுகைக்காக) வருவதற்கு  தாமதித்தார்கள். பிறகு வெளியே வந்து தான் வராததிற்கான காரணத்தை (பின் வருமாறு) கூறினார்கள் :
"என் ஆடையை  துவைத்தது என்னை தடுத்து விட்டது. அந்த ஆடையும் துவைக்கப்பட வேண்டியதாய் இருந்தது.
எனக்கு இதைத் தவிர வேறு ஆடையும் இல்லை ".

Sunday, 30 July 2017

அற்புத மனிதர் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்களைப் பற்றிய அரிய தகவல்கள்



سمع الإمام أبو حنيفة عن شاة سرقت فلم يأكل لحم شاة مدة تعيش الشياه عادة، مخافة أن يأكل من المسروقة.

இமாம் அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஒரு ஆடு திருடப்பட்டதாக கேள்விபட்டார்கள் அது முதல் வழமையாக ஆடுகள் எத்தனை காலம் வாழுமோ அதுவரை ஆட்டு இறையச்சியை இமாமவர்கள் உண்ணவில்லை காரணம் திருடப்பட்ட ஆட்டின் இறைச்சியை உண்டுவிடுவோமோ என்ற அச்சம் தான்.


🕋🕋🕋🕋🕋

أنه (ابا حنيفة رحمه الله)أقبل ذات يوم على جماعة من الناس فسمعهم يقولون: إن هذا الرجل الذي ترونه لا ينام الليل، فما إن لامست كلماتُهم هذه مسمعه حتى قال: إني عند الناس على ما خلاف أنا عليه عند الله، واللهِ لا يتحدث الناسُ عني منذ الساعة بما لا أفعل، وصار يقوم الليل، و لن أتوسَّد فراشا بعد اليوم في ليل حتى ألقى الله.

(இமாம் அபூ ஹனீஃபா(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் வணக்க வழிபாடுகளில் மிக அதிகமாக ஈடுபட காரணம்)ஒரு நாள் இமாமவர்கள் சில மக்களை கடந்து சென்றார்கள் அப்போது அம்மக்கள் இவ்வாறு கூற கேட்டார்கள்" நீங்கள் பார்க்கும் இந்த மனிதர்(வணக்கத்தின் காரணமாக) இரவு உறங்குவதில்லை".
இந்த வார்த்தைகள் அவர்களின் செவிப்பறை அடைந்தபோது (பின் வருமாறு) கூறினார்கள்
"நான் அல்லாஹ்விடம் இருக்கும் நிலைக்கு மாற்றமாக மக்களிடம் இருக்கிறேனே.
இந்நேரம் முதல் நான் செய்யாத எந்தவற்றையும் மக்கள் கூறக்கூடாது".
அன்று முதல் இரவு முழுவதும் நின்று வணங்கினார்கள் அன்றைய தினத்துக்கு பின்பு இறைவனை சந்திக்கும் வரை இரவில் (உறங்குவதற்கு) தலையணை வைத்துக்கொள்ளவில்லை.


وقد رأى ذات يوم ثيابا رثة على أحد من جلسائه، فلما انصرف الناس و لم يبق في المجلس إلا هو والرجل قال له: ارفع هذا المصلى وخذ ما تحته، فرفع الرجل المصلى فإذا تحته ألف درهم، فقال له أبو حنيفة: خذها و أصلح بها من شأنك، فقال الرجل: إني موسر، و قد أنعم الله علي، و لا حاجة لي بها، فقا له أبو حنيفة: إذا كان الله قد أنعم عليك فاين آثار نعمته، أما بلغك أن النبي صلى الله عليه و سلم يقول
(( عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يُحِبَّ أَنْ يَرَى أَثَرَ نِعْمَتِهِ عَلَى عَبْدِهِ ))
[رواه الترمذي]
فينبغي عليك أن تصلح من شأنك حتى لا تُغمَّ صديقك.
( صور من حياةالتابعين)
ஒரு நாள் அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்)தன்னோடு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் மீது மட்டமான ஆடையிருப்பதை கண்டார்கள். மக்களெல்லாம் சென்று விட்டனர். அந்த சபையில் இமாமவர்களையும், அம்மனிதரை தவிர யாருமில்லை.

அப்போது இமாவர்கள் அம்மனிதரிடம்"இந்த தொழுகை விரிப்பை நீக்கு, அதன் கீழ் இருப்பதை எடுத்துக்கொள்" என்றார்கள். அந்த மனிதர் தொழுகை விரிப்பை நீக்கினார் அப்போது அதன் கீழ் ஆயிரம் திர்ஹங்கள் இருந்தன.
இமாமவர்கள் அவரிடம் "இந்த திர்ஹங்களை நீ எடுத்துக்கொள். இதன் மூலம் உன் நிலையை சீர் செய்துக்கொள்"என்றார்கள்.

அதற்கு அம்மனிதர் "நான் வசதியானவன், எனக்கு அல்லாஹ் (நிறைய) நிஃமத்துக்கள் செய்துள்ளான். எனவே அந்த திர்ஹங்கள் எனக்கு தேவையில்லை" என்றார்.

அப்போது அவரிடம் இமாமவர்கள்,
"உனக்கு அல்லாஹ் (நிறைய) நிஃமத்துக்கள் செய்திருந்தால் அதன் அடையாளங்கள் எங்கே? நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் (இந்த) கூற்று உன்னை வந்தடையவில்லையா?
"நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள் :
"நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள்மீது தான் செய்த நிஃமத்துகளின் அடையாளத்தை காண விரும்புகிறான்"[திர்மிதி].
எனவே உன் நண்பன் (உன் நிலை கண்டு) வருந்தாத வண்ணம் உன் நிலையை நீர் சீர்படுத்துவது உன்மீது கட்டாயமாகும்" என்றார்கள்.



أنه(ابا حنيفة رحمه الله) كان إذا أنفق على عياله نفقة تصدَّق بمثلها على غيرهم من المحتاجين، وإذا اكتسى ثوبا جديدا كسى المساكين بقدر ثمنه، و كا إذا وُضع الطعام بين يديه غرف منه ضعف ما يأكله عادة ودفع به إلى الفقراء،
(صور من حياة التابعين)

இமாம் அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்
தன் குடும்பத்துக்கு செலவு செய்தால் அதே அளவு தொகையை தேவையுள்ள மற்றவர்களுக்கு தர்மம் செய்துவிடுவார்கள்.

தான் புதிய ஆடயை அணிந்தால் அந்த ஆடையின் விலையளவுக்கு ஏழைமக்களுக்கு ஆடையை அணிவிப்பார்கள்.

அவர்களுக்காக உணவு வைக்கப்பட்டால் தான் வழமையைக உண்னும் அளவைவிட இருமடங்கு உணவை எடுத்து ஏழைஎளியோருக்கு கொடுத்து விடுவார்கள்.



كان الرجل يزعم للناس فيما يزعمه لهم أن عثمان بن عفان كان يهوديا في اصله وانه ظل على يهوديته بعد الاسلام ايضا فلما سمع أبو حنيفة رحمه الله هذه المقالة ، فمضى إليه، وقال له: لقد جئتك خاطباً ابنتك فلانة لأحد أصحابي، فقال: أهلاً ومرحباً بك، مثلك يا أبا حنيفة لا ترد حاجته؛ لكن من الخاطب؟ فقال أبو حنيفة : رجل موسومٌ في قومه بالشرف والغنى، سخي اليد، مبسوط الكف، حافظٌ لكتاب الله، يقوم الليل كله في ركعة، كثير البكاء من خشية الله، فقال الرجل: بخٍ بخ، حسبك يا أبا حنيفة ! ان بعض ما ذكرته من صفات الخاطب كفؤ لبنت أمير المؤمنين. فقال: لكن فيه خصلة لا بد أن أذكرها لك، فقال: ما هي يا أبا حنيفة ؟ قال: إنه يهودي، فانتفض الرجل، وقال: يهودي؟ أزوج ابنتي من يهودي؟! والله لا أزوجها منه ولو جمع خصال الأولين والآخرين! فقال أبو حنيفة : تأبى أن تزوج ابنتك من يهودي، وتنكر ذلك أشد نكير، ثم تزعم للناس أن رسول الله صلى الله عليه وسلم زوج ابنتيه كلتيهما من ذي النورين ؛ من يهودي هو عثمان رضي الله عنه؟ فعرت الرجل رعدة، وارفض عرقه، وقال: أستغفر الله من قول سوءٍ قلته، ومن كل فرية افتريتها
(صور من حياة الصحابة)

இமாம் அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்)அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் " உஸ்மான் (ரலியல்லாஹ் அன்ஹு) அவர்கள் ஆரம்பத்திலேயே யூதராகயிருந்தார் என்றும், இஸ்லாம் வந்த பின்பும் யூதராகவே இருந்தார்கள்"என்றும் மக்களிடம் கூறிவந்தார்.

இதை கேள்விபட்ட இமாமவர்கள் அவரிடம் சென்று
" உம்முடைய மகளை என் நண்பர்களில் ஒருவருக்கு திருமணம் முடிப்பதற்காக பேச வந்துள்ளேன்" என்று கூறினார்கள்.

அம்மனிதர்:
இமாவர்களை வரவேற்று
உம்மை போன்றவரின் தேவையை மறுக்கமுடியாதுதான் ஆனால் மணமகன் யார்? என்று கேட்டார்.

இமாமவர்கள்:
"அவரோ தன் மக்களிடத்தில் செல்வத்தாலும் ,சிறப்புகளாலும் வர்ணிக்கப்படுபவராகும்,
பெரும் கொடையாளி,தாராளமாக செலவு செய்பவராகும்,குர்ஆனை மனனம் செய்தவராகும்,இரவு முழுவதும் நின்று வணங்குபவராகும்,அல்லாஹ்வை அஞ்சி அதிகம் அழுபவராகும்". என்று கூறினார்கள்.

அம்மனிதர்:
(மிகுந்த சந்தோஷத்துடன்) இமாமவர்களே (இது)போதும் போதும் நீங்கள் கூறிய மணமகனின் சில அம்சங்கள் கலீஃபாவின் மகளையே திருமணம் முடிக்க பொருத்தமாக உள்ளது என்றார்.

இமாமவர்கள் :
ஆனால் அவரிடம் ஒரு அம்சம் உள்ளது அதை அவசியம் உம்மிடம் கூறவேண்டுமே என்றார்கள்.

அம்மனிதர்: இமாமவர்களே அது என்ன? என்றார்.

இமாவர்கள்:
அவர் ஒரு யூதர் என்றார்கள்.

அம்மனிதர்: என்ன இமாமவர்களே? அவர் யூதரா? என்றவாறு துடிதுடித்துபோனார்,
ஒரு யூதனுக்கு என் மகளை திருமணம் முடித்து தருவேனா ?
அல்லாஹ்மீது ஆணையாக "அவர் தன்னிடம் முன்னோர் ,பின்னோரின் அனைத்து நல்லஅம்சங்களை ஒன்று சேர்த்து வைத்திருந்தாலும் திருமணம் முடித்து தரமாட்டேன் என்றார்.

இமாமர்கள்: நீ உன் மகளை யூதனுக்கு திருமணம் முடித்து கொடுக்க மறுக்கிறாய்,மிக கடுமையாக அதை நிராகரிக்கிறாய்.பின்பு நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)தன் இருமகள்களையும் துன்னூரான உஸ்மான்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள் என்று கூறுகிறாயே
உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் எப்படி யூதராக இருக்க முடியும்? என்று கேட்டார்கள்.

அம்மனிதர் கடுமையாக நடுங்கிவிட்டார், வேர்த்து கொட்டஆரம்பித்தது, நான் கூறிய தீய சொலிற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் இட்டுக்கட்டி கூறியதற்காக தவ்பா செய்கிறேன் என்றார்.




ان أبا حنيفة يقول :
رأيت رؤيا أفزعتني ، رأيت كأني أنبش قبر النبي -صلى الله عليه وسلم- فأتيت البصرة ، فأمرت رجلا يسأل محمد بن سيرين فسأله ، فقال : هذا رجل ينبش أخبار رسول الله -صلى الله عليه وسلم
(تذكرة الذهبي)

இமாம் அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) கூறுவதாவது:

நான் கனவு ஒன்று கண்டேன் அது எனக்கு திடுக்கத்தை கொடுத்தது.
( அந்த கனவு) நான் நபி( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரை தோண்டுவதாக கணவு கண்டேன்
பின்பு நான் பஸாரா நகருக்கு வந்தேன்.இந்த கணவு குறித்து முஹம்மது இப்னு ஸீரீன்( ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் (விளக்கம்) கேட்டு வருமாறு ஒரு மனிதருக்கு உத்திரவிட்டேன்.

அவரும் முஹம்மது இப்னு ஸீரீன் அவர்களிடம் கேட்டார்.
அப்போது " (இதன் விளக்கும)இந்த (கணவை கண்ட) மனிதர் நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஹதீகளை( ஆய்வு செய்ய) தோண்டுவார்.





قال الإمام الباقر: أنت الذي حولت دين جدي وأحاديثه إلى القياس.
قال أبو حنيفة: أجلس مكانك كما يحق لي، فإن لك عندي حرمة، كحرمة جدك (صلى الله عليه وسلم)، في حياته على أصحابه، فجلس، ثم جثا أبو حنيفة بين يديه، ثم قال: إني أسألك عن ثلاث كلمات فأجبني، الرجل أضعف أم المرأة.
قال الباقر: المرأة أضعف، قال أبو حنيفة: كم سهم المرأة في الميراث، قال الباقر: للرجل سهمان، وللمرأة سهم، قال أبو حنيفة: هذا علم جدك، ولو حولت دين جدك لكان ينبغي القياس أن يكون للرجل سهم، وللمرأة سهمان، لأن المرأة أضعف من الرجل، ثم الصلاة أفضل أم الصوم، قال الباقر: الصلاة أفضل، قال أبو حنيفة: هذا قول جدك، ولو حولت دين جدك، لكان أن المرأة إذا طهرت من الحيض أمرتها أن تقضي الصلاة، ولا تقضي الصوم.
ثم البول أنجس أم النطفة؟
قال الإمام الباقر: البول أنجس، قال أبو حنيفة: لو كنت حولت دين جدك بالقياس، لكنت أمرت أن يغتسل من البول، ويتوضأ من النطفة، ولكن معاذ الله أن أحول دين جدك بالقياس.
فقام الإمام الباقر، وعانقه، وقبل وجهه.
(ترجمة الذهبي للامام ابي حنيفة)

🌹🌹அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கியாஸின் (அறிவின்) படி தான் சட்டம் கூறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த போது, இமாமவர்களை சந்திக்க நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் பேரர் இமாம் பாகிர் (ரஹிமஹுல்லாஹ்) வந்தபோது இருவருக்குமிடையில் நடந்த உரையாடல் 🌹🌹

இமாம் பாகிர் : நீங்கள் தான் என் பாட்டனாரின் தீனையும், அவர்களின் ஹதீஸ்களையும் (உங்கள்) கியாஸின் (அறிவின்) நோக்கி திருப்பி விட்டீர்களாமே.

இமாம் அபூ ஹனீஃபா : நீங்கள் உங்களுக்கான (இந்த) இடத்தில் அமருங்கள். அதற்குக் காரணம் இது (இவ்வாறு அமர வைப்பது) எனக்கு கடமையாகும். ஏனெனில் உங்கள் பாட்டனார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) வாழும் காலத்தில் ஸஹாபக்களிடம் என்ன கண்ணியம் இருந்தததோ, அதே கண்ணியம் என்னிடம் உங்களுக்கு இருக்கிறது. (உடனே) இமாம் பாகிர் அமர்ந்தார்கள். அவர்களுக்கு முன்னால் இமாமவர்கள் மண்டியிட்டு அமர்ந்தார்கள்.

அடுத்து நான் இப்போது மூன்று விஷயங்கள் குறித்து கேட்கிறேன் நீங்கள் பதில் தரவேண்டும் என்றார்கள்.

【1】 இமாமவர்கள்: ஆண் பலவீனமானவனா ? பெண் பலவீனமானவளா?

இமாம் பாகிர்:பெண் தான் பலவீனமானவள்.

இமாமவர்கள்:சொத்திலே பெண்ணுக்குரிய பங்கு எவ்வளவு?

இமாம் பாகிர் :ஆணுக்கு இருபங்கும் ,பெண்ணுக்கு ஒரு பங்குமாகும்.

இமாமவர்கள்: இது தான் உங்கள் பாட்டனார்(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கற்று தந்ததாகும்.உங்கள் பாட்டனாரின் மார்க்கத்தை நான் மாற்றுவதாகயிருந்தால்
( என்னுடைய) அறிவு ஆணுக்கு ஒருபங்கையும் ,பெண் ஆணைவிட பலவீனமாகயிருப்பதால் இருபங்குகளையும் அவசியமாக கருதுகிறது(நான் அப்படி கூற வில்லை).

【2】இமாமவர்கள்:
மிகச்சிறந்தது தொழுகையா?நோன்பா?

இமாம் பாகிர்: தொழுகைதான் மிகச்சிறந்தது.

இமாமவர்கள்: இது உங்களின் பாட்டனார்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களின் சொல்லாகும்.உங்களின் பாட்டனாரின் மார்கத்தை நான் மாற்றுதாகயிருந்தால்
ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையாகும்போது தொழுகை களா செய்வதற்கும் நோன்பை களா செய்யாமலிருக்கவும் உத்திரவிட்டிருப்பேன். (அவ்வாறு நான் செய்யவில்லை)

【3】இமாமவர்கள்: கடுமையான நஜீஸ் சிறு நீரா? இந்திரியமா?

இமாம் பாகிர்: சிறு நீர்தான் கடுமையான நஜீஸாகும்.

இமாமவர்கள்: அறிவை வைத்து உங்களின் பாட்டனார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மார்கத்தை நான் மாற்றுவதாகயிருந்தால் சிறு நீர் கழித்தால் குளிக்கவும் .இந்திரியம் வெளியானால் ஒழூ செய்யவும் உத்திரவிட்டுயிருப்பேன்(நான் அவ்வாறு செய்யவில்லை)மேலும் அறிவை கொண்டு தங்களின் பாட்டனாரின் மார்கத்தை மாற்றுவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

(இதை கேட்ட ) இமாம் பாகிர் அவர்கள் எழுந்து அபூ ஹனீஃபா இமாமவர்களை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டார்கள்



ان ابا حنيفة (رحمه الله) قام الليل كله وهو يردد قوله جل وعز (بل الساعة موعدهم، والساعة ادهى وأمر)وهو يبكي من خشية الله بكاء يقطع نياط القلوب.
(صور من حياة التابعين)

இமாம் அபூஹனீஃபா
(ரஹிமஹுல்லாஹ்)
அவர்கள் இரவு முழுவதும் இந்த வசனத்தை(இறுதித்தீர்ப்பு நாள் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும்; இறுதித் தீர்ப்பு நாள் மிகக் கடுமையானதாகும், மிகக் கசப்பானதாகும்.சூரா அல் கமர் -54:46 ) திரும்ப திரும்ப ஒதி நின்று வணங்கினார்கள். இன்னும் அல்லாஹ்வின் அச்சத்தால் இதயத்தின் இரத்த நாளங்கள் துண்டிக்கப்படும் அளவுக்கு அழுதார்கள்.




جاءته امرأة بثوب من الحرير تبيعه له ، فقال : كم ثمنه ، قالت : مئة ، فقال أبو حنيفة : هو خير من ذلك ، بكم تقولين ؟ فزادت مئة ، مئة حتى قالت : أربعمئة ، قال : هو خير من ذلك، قالت :تهزأ بي ؟ قال : هاتِى رجلاً يقومه ، فجاءت برجل فاشتراه بخمسمئة .
(الكتاب: امام ابوحنيفة حياته وعصره)

🌹🌹 இமாம் அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் நேர்மை🌹🌹

ஒரு பெண்மனி இமாமவர்களிடம் பட்டுத்துணியை விற்பனை செய்ய வந்தாள்.

இமாமவர்கள்: இதன் விலை என்ன?

பெண்: நூறு திர்ஹம்கள் என்றாள்.

இமாமவர்கள் :இது நூறு திர்ஹம்களைவிட அதிகம்,
எவ்வளவு திர்ஹம்கள் கூறுகிறாய்?என்றார்கள்.

பெண்:நூறு நூறு திர்ஹம்களாக அதிகப்படுத்தி இறுதியில் நானூறு திர்ஹம்கள் என்றாள்.

இமாமவர்கள்:இது அதையும் விட விலை அதிகம் என்றார்கள்.

பெண்: என்னை கேலி செய்கிறீர்களா?என்றாள்.

இமாமவர்கள்:இந்த துணிக்கு விலை மதிப்பீடு செய்யும் மனிதரை அழைத்துவா என்றார்கள்.

பெண்: ஒரு மனிதரை அழைத்து வந்தாள்.(அந்த மனிதர் விலை மதிப்பீடு செய்தபின் ) ஐநூறு திர்ஹம்கள் கொடுத்து அந்த துணியை வாங்கினார்கள்